பிற விளையாட்டு

பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் கிருஷ்ணா நாகர்! + "||" + TokyoParalympics, Badminton Men's Singles: Krishna Nagar beats Great Britain's Krysten Coombs

பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் கிருஷ்ணா நாகர்!

பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் கிருஷ்ணா நாகர்!
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் இறுதிபோட்டிக்கு முன்னேறி உள்ளார்.
டோக்கியோ, 

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதில் இந்தியாவின் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறினார். அடுத்ததாக இந்திய வீரர் மனோஜ் சர்கார் தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றார்.  

இதனையடுட்து ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் இந்தோனேஷியாவின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுகாஷ் யத்திராஜ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாராஒலிம்பிக் பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.  

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற எஸ்.ஹெச் 6 பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் இங்கிலாந்து வீரர் கூம்ஸ் கிரெஸ்டனை எதிர்த்து விளையாடினார்.  அதில், 21-10, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டு சுற்றுகளையும் கைப்பற்றி போட்டியை வென்றார். இதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள அவர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை (தங்கம் அல்லது வெள்ளி) உறுதி செய்துள்ளார். 

இதனிடையே இன்று காலை 11.45 மணிக்கு பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி இணை கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ஹரி சுசான்டோ-லியானி இணையை எதிர்த்து விளையாட உள்ளது. மேலும் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ள எஸ்.எல் 3 பிரிவு பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத், இங்கிலாந்து வீரர் பெத்தேலை எதிர்த்து விளையாட உள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி: பேட்மிண்டன் இறுதிபோட்டிக்கு சுகாஷ் யத்திராஜ் தகுதி!
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியவீரர் சுகாஷ் யத்திராஜ் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
2. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்தியவீரர் மனோஜ் சர்கார் தோல்வி
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியவீரர் மனோஜ் சர்கார் தோல்வியடைந்தார்.
3. பாராஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் வெற்றி
பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் வெற்றியுடன் தொடங்கினார்.
4. ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் சஞ்சீத் தங்கம் வென்றார்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது.