தேசிய செய்திகள்

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை! + "||" + India Registers Its Best Showing At Paralympics With A Total Of 19 Medals In Tokyo

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை!

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை!
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
டோக்கியோ, 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இதனையடுத்து பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரரும், உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரருமான கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். பேட்மிண்டனில் மட்டும் இந்தியா 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 4 பதக்கங்களை வென்றிருக்கிறது. 

இதனிடையே தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் தருண் தோல்வியை தழுவினார். பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி இணை ஆடிய வெண்கல பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியே ஏற்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் போராடிய விதம் ஊக்கம் அளிக்கக்கூடியதாக இருந்தது

இந்நிலையில் தற்போது டோக்கியோ பாராஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் முடிவடைந்து உள்ளன. நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்து உள்ளனர். 1968 முதல் 2016 வரை பாராஒலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தநிலையில், தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெக்காராவும், சிங்ராஜ் அதானாவும் இரட்டை பதக்கங்களை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.  

இந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்கதாகவே அமைந்திருக்கிறது. வெற்றிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்- பாபர் அஸாம் சொல்கிறார்
கடந்த கால வரலாற்றை விடுங்கள். நாங்கள் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார்.
2. மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது: தலீபான்
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
3. இந்திய நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியதா?
கடந்த 16 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாதவாறு இந்திய நீர்மூழ்கிக் கப்பலை தங்கள் நாட்டு கடற்படை தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் நேற்று கூறியது.
4. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை
திட்டமிட்டபடி 12 நாட்களில் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.