பிற விளையாட்டு

பதக்கம் வென்றவர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை பயிற்சியாளர்களுக்கும் அளிக்க வேண்டும்: இந்திய வீரர் சுந்தர் சிங் + "||" + Coaches should be given the same respect as medalists: Indian player Sundar Singh

பதக்கம் வென்றவர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை பயிற்சியாளர்களுக்கும் அளிக்க வேண்டும்: இந்திய வீரர் சுந்தர் சிங்

பதக்கம் வென்றவர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை பயிற்சியாளர்களுக்கும் அளிக்க வேண்டும்:  இந்திய வீரர் சுந்தர் சிங்
இந்திய வீரர் சுந்தர் சிங், பதக்கம் வென்றவர்களைபோல் பயிற்சியாளர்களுக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.


புதுடெல்லி,

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்று நாட்டுக்கு திரும்பிய இந்திய வீரர் சுந்தர் சிங்குக்கு டெல்லியில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எனது நாட்டுக்கு பதக்கம் வென்று தந்ததற்காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார்.  இந்த நிலையில், அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பதக்கம் வென்றவர்களைபோல் பயிற்சியாளர்களுக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

சில பயிற்சியாளர்கள் இன்னும் அவர்களுக்கான விருதுகளை பெறவில்லை.  விளையாட்டுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிப்பதில் உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.