ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது


ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது
x
தினத்தந்தி 14 Sep 2021 9:44 AM GMT (Updated: 14 Sep 2021 10:11 AM GMT)

ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.

டோக்கியோ

ஜப்பானில் 16 அணிகள் பங்குபெறும்  21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் கத்தார் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 22-25, 14-25, 20-25 என்ற நேர்செட்டில் கத்தாரிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோற்று இருந்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.

Next Story