பிற விளையாட்டு

சென்னையில் வருகிற 29 முதல் மாநில நீச்சல் போட்டி + "||" + The state swimming competition is being held in Chennai

சென்னையில் வருகிற 29 முதல் மாநில நீச்சல் போட்டி

சென்னையில் வருகிற 29 முதல் மாநில நீச்சல் போட்டி
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 37-வது சப்-ஜூனியர் மற்றும் 47-வது ஜூனியர் பிரிவினருக்கான மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) நீச்சல் வளாகத்தில் வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் வெற்றி பெறுபவர்கள் பெங்களூருவில் (அக்டோபர் 19-23) நடைபெறும் தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் 75-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி இதே வளாகத்தில் அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்கள் பெங்களூருவில் (அக்டோபர் 26-29) நடைபெறும் தேசிய சீனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 5 நாட்கள் நடைபெறும் மாநில நீச்சல் போட்டிகளில் சுமார் 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புனேவில் இருந்து 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை
புனேவில் இருந்து கூடுதலாக 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.
2. புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3. ஐதராபாத், புனேவில் இருந்து 9 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
4. புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன.
5. சென்னையில் பெட்ரோல் திருட்டு அதிகரிப்பு; வாகன ஓட்டிகளே உஷார்
100 ரூபாயை கடந்து செல்வதால் சென்னையில் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அரங்கேற தொடங்கி உள்ளன.