பிற விளையாட்டு

1500 மீட்டர் ஓட்டத்தில் 19 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்த பஞ்சாப் வீராங்கனை + "||" + Punjab athlete breaks 19-year-old national record in 1500 meters

1500 மீட்டர் ஓட்டத்தில் 19 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்த பஞ்சாப் வீராங்கனை

1500 மீட்டர் ஓட்டத்தில் 19 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்த பஞ்சாப் வீராங்கனை
1500 மீட்டர் ஓட்டத்தில் 19 ஆண்டுகால தேசிய சாதனையை பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ் முறியடித்தார்.
வாரங்கல்,

60-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ் 4 நிமிடம் 05.39 வினாடிகளில் இலக்கை கடந்து 19 ஆண்டு கால தேசிய சாதனையை தகர்த்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் சுனிதா ராணி 4 நிமிடம் 06.03 வினாடியில் இலக்கை எட்டியதே தேசிய சாதனையாக இருந்தது.

100 மீட்டர் ஓட்டத்தில் டெல்லி இளம் மங்கை தரன்ஜீத் கவுர் 11.50 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 53.79 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.