பிற விளையாட்டு

ஆசிய கைப்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி + "||" + Asian Volleyball: First win for the Indian team

ஆசிய கைப்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஆசிய கைப்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி
ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிக்கு முதல் வெற்றி பெற்றது.
சிபா,

16 அணிகள் பங்கேற்றுள்ள 21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்களில் இந்திய அணி, பக்ரைன், கத்தார், ஜப்பான் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி கண்டு கால்இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 

தற்போது 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 25-20, 25-20, 25-20 என்ற நேர்செட்டில் குவைத்தை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. 

முந்தைய தோல்விகளால் உலக தரவரிசையில் 108-வது இடத்துக்கு சறுக்கிய இந்திய அணி இந்த ஆறுதல் வெற்றியின் மூலம் தரவரிசையில் 82-வது இடத்துக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.