பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா வழக்கு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் + "||" + Delhi HC seeks central government's stand on Manika Batra's plea against Table Tennis Federation of India

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா வழக்கு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா வழக்கு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
இந்தியா டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு செப்டம்பர் மாதம் கத்தாரில் நடக்கும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை கடந்த வாரம் அறிவித்தது.
புதுடெல்லி

ஜுன் 2021யில்  தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது . இதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு பிரிவில் இந்தியாவின் சார்பாக வீராங்கனை மணிகா பத்ரா பங்குபெற்றார்.

மணிகா மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில்  தன்னுடைய பயிற்சியாளர் சவுமியாதீப் ராய் உதவி இல்லாமல் போட்டியை எதிர்கொண்டார் 

இது குறித்து இந்தியா டேபிள் டென்னிஸ் கூட்டமைப்புக்கு அவர் விளக்கமும் அளித்து  இருந்தார் .அதில் தன்னுடைய பயிற்சியாளர் சவுமியாதீப் ராய் வேண்டும்  என்றே தன்னை தோல்வி அடைய கூறியதாக குற்றம் சாட்டினார்.

தன்னுடைய சக போட்டியாளருக்கு உதவி செய்ய பயிற்சியாளர் சவுமியாதீப் ராய் இவ்வாறு செய்வதாக புகார் அளித்து இருந்தார் . 

இந்த நிலையில் இந்தியா டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு செப்டம்பர் மாதம் கத்தாரில் நடக்கும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை கடந்த வாரம் அறிவித்தது.

இதில் இந்தியாவின் மணிகா பத்ராவின் பெயர் இடம்பெறவில்லை . இதற்கு எதிராக  டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

இந்த மனு  நீதிபதி ரேகா பள்ளி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மணிகா சார்பாக வாதாடிய வக்கீல் பயிற்சியாளரை அவமதித்தாக கருதியே மணிகாவின் பெயர் நீக்கபட்டுள்ளது . அது குறித்து மணிகா தரப்பில் போதிய விளக்கம் ஏற்கனவே  அளிக்கபட்டுள்ளது . இருப்பினும் வரும் ஆசியா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் விளையாடும்  வீரர்களின் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை .  இது நியாயமற்றது . மணிகா மீது எந்த தவறும் இல்லை . இது குறித்து உரிய விசாரணை நடத்தி  வரும் ஆசியா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் மணிகா விளையாட அனுமதிக்கும் வேண்டும் என வாதாடினார்.

வாதங்களை கேட்ட நீதிபதி ரேகா மணிகா இந்தியாவின் தலை சிறந்த வீராங்கனை. அவரிடம் இருந்து  புகார் பெறப்பட்டுள்ளது . தன்னுடைய பயிற்சியாளர் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார் . இது கவனிக்க பட வேண்டிய ஒன்று .  மத்திய அரசு இதில் தலையிட்டு தனது நிலைப்பாட்டை  2 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என  நீதிபதி  உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம்.
கடந்த வாரம் நடந்த ஆண்கள் கூட்டு பிரிவில் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ,ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று இருந்துது.
2. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்திய அணிக்கு வெண்கலம்
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென்கொரிய அணி இறுதியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
3. உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பை: காலிறுதிக்கு முன்னேறினார் அர்ச்சனா காமத்.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் அர்ச்சனா,மியு நாகசாகியை 11-13, 6-11, 11-8, 12-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்
4. சக வீராங்கனைக்காக விட்டுக்கொடுக்க வற்புறுத்தினார்: பயிற்சியாளர் மீது மனிகா பத்ரா பரபரப்பு புகார்
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று வரை மணிகா பத்ரா முன்னேறியிருந்தார்.
5. டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் சரத் கமல் வெற்றி
ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு சரத் கமல் தகுதி பெற்றார்,.