பிற விளையாட்டு

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் கூட்டு பெண்கள் பிரிவு : இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி + "||" + Archery World Championships: India women’s compound team enters final;

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் கூட்டு பெண்கள் பிரிவு : இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் கூட்டு பெண்கள் பிரிவு : இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
நாளை நடைபெறும் இறுதி போட்டிக்கு குர்ஜார், மஸ்கான் கிரார் மற்றும் ஜோதி சுரேகா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் அமெரிக்காவின் யாங்க்டோன் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கூட்டு பெண்கள் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

இந்தியாவின் சார்பாக பிரியா குர்ஜார், மஸ்கான் கிரார் மற்றும் ஜோதி சுரேகா ஆகியோர் அமெரிக்காவின்  லிண்டா ஓச்சோவா, பைஜ் பியர்ஸ், ப்ரோக்டர் ஆகியோரை எதிர்கொண்டனர் . பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 226-225 என்ற கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தியது .

இதன் மூலம் நாளை நடைபெறும் இறுதி போட்டிக்கு குர்ஜார், மஸ்கான் கிரார் மற்றும் ஜோதி சுரேகா ஆகியோர்  தகுதி பெற்றுள்ளனர். மற்றொரு அரையிறுதி போட்டியில் கொலம்பியா கூட்டு பெண்கள் அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர் .

நாளை நடைபெறும் இறுதி போட்டியில் வலுவான கொலம்பியா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி .
Related Tags :