சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்தியா-தாய்லாந்து அணிகள் இன்று மோதல்


சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்தியா-தாய்லாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 25 Sep 2021 11:05 PM GMT (Updated: 25 Sep 2021 11:05 PM GMT)

17-வது சுதிர்மான் கோப்பைக்கான உலக கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பின்லாந்து நாட்டில் உள்ள வாண்டா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, தாய்லாந்து, போட்டியை நடத்தும் பின்லாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கிறன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு போட்டியும் 2 ஒற்றையர், 3 இரட்டையர் ஆட்டங்களை கொண்டதாகும். இந்திய அணி இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்திக்கிறது. இந்திய நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், இரட்டையர் பிரிவின் முன்னணி வீரர்களான சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை. சாய் பிரனீத், ஸ்ரீகாந்த், அஸ்வினி, சிக்கி ரெட்டி போன்ற அனுபவம் வாய்ந்தவர்களுடன், இளம் வீரர்-வீராங்கனைகள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Next Story