பிற விளையாட்டு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் : தங்கப் பதக்கம் வென்றார் ஆதேஷ் யாதவ். + "||" + Uttar Pradesh's Adesh Yadav has won a gold medal in the men’s 5,000-metres race in the inaugural edition of the National U23 Athletics Championships.

தேசிய தடகள சாம்பியன்ஷிப் : தங்கப் பதக்கம் வென்றார் ஆதேஷ் யாதவ்.

தேசிய தடகள சாம்பியன்ஷிப் : தங்கப் பதக்கம் வென்றார் ஆதேஷ் யாதவ்.
ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதேஷ் யாதவ் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.
டெல்லி 

23 வயது உட்பட்டோருக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லி ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதேஷ் யாதவ் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இவர் மராட்டிய மாநிலத்திற்காக இந்த போட்டியில் பங்குபெற்றார்.

14 நிமிடங்கள் 12.36 வினாடிகளில் இலக்கை அடைந்து  தனது முதல் தங்கப் பதக்கத்தை பெற்றார்  ஆதேஷ் யாதவ். 

இது குறித்து ஆதேஷ் யாதவ் கூறியதாவது:

5,000 மீட்டரில் வெற்றி பெற்ற எனக்கு விளையாட்டு துறையின் இடஒதுக்கீடு  மூலம் ரெயில்வேயில் வேலை கிடைக்கும். நான் தங்கம் வெல்ல இங்கு வந்தேன். கடவுளுக்கு நன்றி எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. 
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :