மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் :ஒலிம்பிக் பதக்கத்தால் நேரடியாக தகுதி பெற்றார் லவ்லினா


மகளிர் உலக  குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் :ஒலிம்பிக் பதக்கத்தால் நேரடியாக தகுதி பெற்றார் லவ்லினா
x
தினத்தந்தி 5 Oct 2021 11:15 AM GMT (Updated: 5 Oct 2021 11:15 AM GMT)

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காரணத்தால் லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று உள்ளார்.

டெல்லி 

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்தான்புல்லில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் பங்குயேற்க வேண்டுமெனில் இந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்க இருக்கும் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பதக்கம் வெல்ல வேண்டும். 

 இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காரணத்தால்  லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று உள்ளார். 24 வயதான  லவ்லினா அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று விட்ட காரணத்தால் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் கட்டாயத்தில் இருந்து விலகியுள்ளார். 

Next Story