பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர் + "||" + 14-year-old shooter Naamya Kapoor wins gold in junior world shooting championship

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர்
இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.
லிமா,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பெரு தலைநகர் லிமாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா 8 தங்கப் பதக்கம் உட்பட மொத்தம் 17 பதக்கங்ளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது . அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 14 வயதான  இந்தியாவின் நம்யா கபூர் தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதே பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் வெண்கல பதக்கம்  வென்றார். இதன் மூலம் மிக இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.

இது குறித்து நம்யா கபூர் தந்தை பிரவீன் கூறியதாவது :

“நம்யா தனது மூத்த சகோதரி குஷியுடன் சேர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்தியாவிலிருந்து தனியாகப் அவள் பயணம் செய்வது இதுவே முதல் முறை, ஆனால் அவள் தன்னை நன்றாகக் கையாண்டு உள்ளார்" 

இவ்வாறு அவர் தெரிவித்தார் .


தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில் இன்று தொடங்குகிறது
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்
2. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம்
டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
3. துப்பாக்கி சுடுதல், வில்வித்தையில் தொடர்ந்து ஏமாற்றம்
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் மானு பாகெரும், வில்வித்தையில் தீபிகா குமாரியும் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறார்கள்.