தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன்: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது இந்தியா


தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன்: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 10 Oct 2021 12:49 PM GMT (Updated: 10 Oct 2021 12:49 PM GMT)

இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ மற்றும் ருடபர்னா பாண்டா ஜோடி இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.

டென்மார்க் 

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் இன்று தொடங்கி  17ஆம்  தேதி வரை நடக்கிறது. பெண்களுக்கான உபேர் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜப்பான், இந்தியா, இந்தோனேஷியா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அதே பிரிவில் தாய்லாந்து, ஸ்பெயின், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடம் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்திய பெண்கள் அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா  நேவால் வெகு நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பினார்.கிளாரா அசுர்மெண்டிக்கு எதிரான தனது ஆரம்ப போட்டியில் முதல் செட்டை இழந்த அவர் பின்னர் திடீர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் .

இதை தொடர்ந்து நடந்த போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஜோடி  மிகக் குறைந்த தரவரிசை ஜோடி அசுர்மெண்டி மற்றும் கோரலெஸுக்கு எதிராக தோல்வியடைந்தனர். 

அதன் பிறகு நடந்த போட்டியில் இளம் இந்தியா வீராங்கனைகளான மாளவிகா பன்சோட் மற்றும் அதிதி பட் ஆகியோர் தங்கள் ஒற்றையர் ஆட்டத்தை நேர் செட்களில் வென்றனர்.

இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ மற்றும் ருடபர்னா பாண்டா ஜோடி இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம்  இந்திய அணி 3-2 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. 

Next Story