பிற விளையாட்டு

ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் : 43 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது இந்தியா + "||" + ISSF Junior World Championship: India Finish on Top with 43 Medals, Including 17 Gold

ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் : 43 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது இந்தியா

ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் : 43 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது இந்தியா
இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்த தொடரில் அதிகபட்சமாக 4 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்று அசத்தினார்.
லிமா 

ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பெரு நாட்டின் லிமா நகரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. தொடக்க நாள் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய  அணியினர் 17 தங்கம் ,16 வெள்ளி,10 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்தனர்.

கடைசி நாளான  நேற்று முன்தினம் மட்டும்  இந்திய வீரர் ,வீராங்கனைகள் 12 பதக்கங்களை வென்று சாதனை  படைத்தனர். மொத்தம்  21 பதக்கங்களுடன் அமெரிக்க அணி பதக்க பட்டியலில்  இரண்டாம்  இடத்தையும் ,10 பதக்கங்களுடன் இத்தாலி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

19 வயதேயான இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாக்கர்  இந்த தொடரில் அதிகபட்சமாக 4 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்று அசத்தினார். மற்றொரு இந்தியா வீராங்கனை கணேமத் சேகோன் ஒரு தங்கம் ஒரு வெள்ளி என இரண்டு  பதக்கங்களை வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் உலக கோப்பை கால்பந்து 2023: தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி
ஆசிய கோப்பை கால்பந்து: 12 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.
2. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் விழிப்படைய செய்தது - ராகுல் டிராவிட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: டி காக் அபார சதம்
130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
4. மாயமான அருணாச்சலப்பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா- சீனதைபே அணிகள் இன்று மோதல்
இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஏறக்குறைய கால்இறுதியை உறுதி செய்து விடலாம்.