பிற விளையாட்டு

உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய பெண்கள் அணி + "||" + Uber Cup Badminton India Women Trounce Scotland Enter Quarterfinals

உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய பெண்கள் அணி

உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய பெண்கள் அணி
இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது .
டென்மார்க் 

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள்  டென்மார்க்கில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.பெண்களுக்கான உபேர் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜப்பான், இந்தியா, இந்தோனேஷியா உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. 

இந்திய பெண்கள் அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது  இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய பெண்கள் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய  வீராங்கனைகள் எதிரணியின்  எழுச்சிக்கு சிறிதும்  வாய்ப்பு கொடுக்கவில்லை . இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில்  இந்தியாவின்  தனிஷா கிராஸ்டோ மற்றும் ருடபர்னா பாண்டா ஜோடி  ஸ்காட்லாந்தின் ஜூலி மேட்ச்பர்சன் மற்றும் சியாரா டோரன்ஸ் ஜோடியை  21-11 21-8 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினர்.

மற்றொரு போட்டியில் இளம் இந்திய ஜோடி ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த்  21-8 19-21 21-10 என்ற கணக்கில் கில்மோர் மற்றும் எலினோர் ஜோடியை வீழ்த்தினர்.

இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில்  ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது .

தொடர்புடைய செய்திகள்

1. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் - பலாக் கோலி ஜோடி தோல்வி
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பலாக் கோலி, பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.