கென்யா ஒலிம்பிக் வீராங்கனை கொலை :கணவர் கைது


கென்யா ஒலிம்பிக் வீராங்கனை கொலை :கணவர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2021 12:42 PM GMT (Updated: 15 Oct 2021 12:42 PM GMT)

திருமண வாழ்வில் நடந்த பிரச்சினை காரணமாக இம்மானுவேல் ரோட்டிச், அக்னஸ் டிரோப்பை கொலை செய்து இருக்கலாம் என கென்ய ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யா

கென்யாவை சேர்ந்த 25 வயது தடகள வீராங்கனை அக்னஸ் டிரோப். இவர் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10,000 மீ  ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றவர். 

அக்னஸ் டிரோப் சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில்  5,000 மீ  ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டு நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காவது இடம் பிடித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் வயிற்றில் காயங்களுடன்  இறந்து கிடந்தார்.சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்த பொழுது அவரது கணவர் இம்மானுவேல் ரோட்டிச்  வீட்டில் இல்லை.

இது தொடர்பாக கென்யா காவல்துறை தலைமறைவான அவரது கணவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காவல்துறையிடம் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும்போது இம்மானுவேல் ரோட்டிச் கைதுசெய்ப்பட்டுள்ளார்.
விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண வாழ்வில் நடந்த பிரச்சனை காரணமாக இம்மானுவேல் ரோட்டிச், அக்னஸ் டிரோப்பை  கொலை செய்து இருக்கலாம் என கென்ய ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது  குறித்து கென்யாவின் சர்வதேச தடகள  கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்னஸ் டிரோப்பின் மறைவு கென்யா நாட்டிற்கு பேரிழப்பு.கென்யா சர்வதேச அரங்கில் வேகமாக வளர்ந்து வரும் தடகள ஜாம்பவான்களில் ஒரு மாணிக்கத்தை இழந்துள்ளது.அவரது மறைவை முன்னிட்டு அனைத்து தடகள விளையாட்டு நிகழ்வுகளும் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story