பிற விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி + "||" + Denmark open saina nehwal knocked out

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி அடைந்தார்.
ஒடென்ஸ், 

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 14-21 என்ற நேர்செட்டில் 20-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அயா ஒஹோரியிடம் தோற்று வெளியேறினார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-9, 21-7 என்ற நேர்செட்டில் அனுபவம் வாய்ந்த சக நாட்டு வீரர் சவுரப் வர்மாவுக்கு அதிர்ச்சி அளித்தார். பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி இணை தோல்வி கண்டு நடையை கட்டியது. இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி ஏமாற்றம் அளித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. வேல்ஸ் அணியை ஊதித்தள்ளி டென்மார்க் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் அணி, வேல்சை எதிர்கொண்டது.