இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் அபாரம்!


இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் அபாரம்!
x
தினத்தந்தி 16 Nov 2021 12:51 PM GMT (Updated: 16 Nov 2021 12:51 PM GMT)

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பாலி,

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில்,  இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-19 எனும் செட் கணக்கில் தாய்லாந்தின் சுபநிதா கடேதாங்கை வீழ்த்தினார். இதன்மூலம், அடுத்த சுற்று போட்டியில் ஸ்பெயினின் கிளேரா அசர்மெண்டியை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், மற்றொரு இளம் வீரர் லக்‌ஷயா சென் உலகின் 10மம் நிலை வீரரான ஜப்பானின் கண்டா சுநேயாமாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 20 வயதான லக்‌ஷயா சென் ‘டச்சு ஓபன்’ பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர்.

உலகின் 19ம் நிலை வீரராக உள்ள அவர், அடுத்த சுற்று போட்டியில் 2 முறை உலக சாம்பியனான ஜப்பானின் கெண்டோ மொமோடாவை எதிர் கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story