இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து


இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
x
தினத்தந்தி 18 Nov 2021 8:52 AM GMT (Updated: 18 Nov 2021 8:52 AM GMT)

சிறப்பாக விளையாடிய சிந்து 21-7 , 21-12 என்ற கணக்கில் அடுத்தடுத்து இரண்டு சுற்றுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார்

பாலி 

இந்தோனேசிய மாஸ்டர்ஸ்  பேட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவின் பாலி நகரில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்பெயினின் கிளாரா அசுர்மெண்டியை எதிர்கொண்டார்.

உலக பெண்கள் பேட்மிண்டன் தரவரிசையில்  47-வது இடத்தில்  இருக்கும்  அசுர்மெண்டி இன்று முதல் முறையாக தரவரிசையில் 3 வது இடத்தில்  இருக்கும் பி.வி.சிந்துவை எதிர்கொண்டார்.

யாரும் எதிர்பாராத வகையில் 17-21 என்ற கணக்கில் முதல் சுற்றை இழந்த பி.வி.சிந்து , பின்னர் சிறப்பாக விளையாடி 21-7 , 21-12 என்ற கணக்கில் அடுத்தடுத்து இரண்டு சுற்றுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தோனேசிய மாஸ்டர்ஸ்  பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து  முன்னேறியுள்ளார். காலிறுதி சுற்றில்  துருக்கிய வீராங்கனை ஷட்லர் நெஸ்லிஹான்யிகியுடன் சிந்து மோதவுள்ளார்.

இதுவரை ஷட்லர் நெஸ்லிஹான்யிகையை மூன்று முறை எதிர்கொண்டுள்ள சிந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story