பிற விளையாட்டு

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி; கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம் + "||" + Indonesia Masters Badminton Tournament; Kithambi Srikanth advances to semifinals

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி; கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி; கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.


பாலி,

இந்தோனேசியா நாட்டில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், உலக தரவரிசை பட்டியலில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் மற்றும் கடந்த 2014ம் ஆண்டின்
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சாம்பியனான பிரணாய் ஆகியோர் விளையாடினர்.  39 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டி முடிவில் பிரணாயை 21-7, 21-18 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீகாந்த் வீழ்த்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.  அடுத்து, தாய்லாந்து நாட்டின் விதித்சரன் அல்லது டென்மார்க்கின் ஆன்டன்சென் ஆகியோரில் ஒருவருடன் ஸ்ரீகாந்த் அரையிறுதியில் விளையாடுவார்.

இதேபோன்று, இதற்கு முன் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் ஆட்டமொன்றில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சிந்து மற்றும் துருக்கி நாட்டின் நெஸ்லிஹான் யிகித் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிய சிந்து 21-13, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  போட்டி 35 நிமிடங்கள் நீடித்தது.

அவர் அடுத்து, ஜப்பானின் அகானே அல்லது தாய்லாந்து நாட்டின் சோச்சுவாங் ஆகியோரில் ஒருவருடன் அரையிறுதியில் விளையாட உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி; சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
2. ஒட்டுமொத்த அணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படும்: ரோகித், டிராவிட் பேட்டி..!
அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
3. பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; சிந்து, சென் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
4. பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் லட்சயா சென் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் லட்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
5. பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.