பிற விளையாட்டு

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வி! + "||" + Pvsindhu exits Indonesia Masters with defeat in semifinals

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வி!

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வி!
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.
பாலி,

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில்,  இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் முன்னிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 13-21, 19-21 எனும் நேர் செட் கணக்கில் ஜப்பானின்  அகானே யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம், அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை சிந்து இழந்துள்ளார்.

இந்த ஆண்டு அவருடன் நடைபெற்ற 2 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

இத்தொடரில், இன்று நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் இந்தியாவின் சார்பில் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.