பிற விளையாட்டு

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்:இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், காஷ்யப் தோல்வி + "||" + Indonesian Super Series Badminton: Indian players Lakshaya Sen, Kashyap lose

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்:இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், காஷ்யப் தோல்வி

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்:இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், காஷ்யப் தோல்வி
இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், காஷ்யப் தோல்வி அடைந்தனர்
பாலி, 

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் கடந்த வாரம் நடந்தது. இந்த நிலையில் மொத்தம் ரூ.6½ கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் அதே நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-23, 15-21 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீரரும், இரண்டு முறை உலக சாம்பியனுமான கென்டோ மோமோட்டாவிடம்(ஜப்பான்) போராடி பணிந்தார்.

இதே போல் இந்தியாவின் காஷ்யப் 11-21, 14-21 என்ற நேர் செட்டில் லோ கீன் யேவிடம் (சிங்கப்பூர்) தோற்று வெளியேறினார். உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் அயா ஒஹோரியை (ஜப்பான்) இன்று சந்திக்கிறார். முன்னாள் சாம்பியனான இந்தியாவின் ஸ்ரீகாந்த் சக நாட்டவரான பிரனாயை எதிர்கொள்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்
2. இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் அபாரம்!
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
3. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
4. உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய பெண்கள் அணி
இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது .
5. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் - பலாக் கோலி ஜோடி தோல்வி
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பலாக் கோலி, பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.