பிற விளையாட்டு

மாநில கூடைப்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரைசிங் ஸ்டார் அணி + "||" + State Basketball: The Rising Star team advanced to the finals

மாநில கூடைப்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரைசிங் ஸ்டார் அணி

மாநில கூடைப்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரைசிங் ஸ்டார் அணி
மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரைசிங் ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சென்னை,

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ரைசிங் ஸ்டார் அணி 68-58 என்ற புள்ளி கணக்கில் சங்கம் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரைசிங் ஸ்டார் அணியில் சுருதி 19 புள்ளியும், அமிர்தா 13 புள்ளியும், ஐஸ்வர்யா 12 புள்ளியும் சேர்த்தனர். 

மற்றொரு அரைஇறுதியில் தெற்கு ரெயில்வே 79-60 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்க ஜூனியர் அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ரெயில்வே அணியில் நிஷாந்தி 16 புள்ளியும், தர்ஷினி 14 புள்ளியும் எடுத்தனர். 

ஆண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி 83-53 என்ற புள்ளி கணக்கில் லயோலாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. விளையாட்டு விடுதி அணியில் ஆனந்தராஜ் 34 புள்ளியும், கார்த்திக் 18 புள்ளியும் குவித்தனர்.