பிற விளையாட்டு

தென்னாப்பிரிக்க சர்வதேச பாட்மிண்டன் தொடர் :சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் அமான் பரோக் + "||" + Indian shuttler Aman Farogh Sanjay wins South Africa International Future Series title

தென்னாப்பிரிக்க சர்வதேச பாட்மிண்டன் தொடர் :சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் அமான் பரோக்

தென்னாப்பிரிக்க சர்வதேச பாட்மிண்டன் தொடர் :சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் அமான் பரோக்
தரவரிசையில் 300-வது இடத்தில் உள்ள அமான் பரோக் சஞ்சய் இறுதி போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ராபர்ட் சம்மர்ஸை எதிர்கொண்டார்.
தென்னாப்பிரிக்கா,

தென்னாப்பிரிக்காவில்  நடைபெற்ற சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்திய  பாட்மிண்டன் வீரர் பரோக் சஞ்சய் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக பாட்மிண்டன் கூட்டமைப்பின் சார்பாக தென்னாப்பிரிக்கா சர்வதேச  பாட்மிண்டன் தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் தொடங்கியது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார் அமான் பரோக் சஞ்சய் . தரவரிசையில் 300-வது இடத்தில் உள்ள அமான் பரோக் சஞ்சய்  இறுதி போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ராபர்ட் சம்மர்ஸை (தென்னாப்பிரிக்கா) எதிர்கொண்டார்.

முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்த  அமான் பரோக் பின்னர் கடுமையாகப் போராடி  21-16, 21-12  என்ற கணக்கில் ராபர்ட் சம்மர்ஸை  வீழ்த்தினார்.நடப்பு கேலோ இந்தியா யூத் கேம்ஸ் சாம்பியனான  அமான் பரோக் , கடந்த மாதம் நடைபெற்ற  போட்ஸ்வானா இன்டர்நேஷனல் பியூச்சர் சீரிஸ் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.