ஒமைக்ரான் அச்சுறுத்தல்: உலக பேட்மிண்டன் போட்டியில் இருந்து இந்தோனேஷியா விலகல்


ஒமைக்ரான் அச்சுறுத்தல்: உலக பேட்மிண்டன் போட்டியில் இருந்து இந்தோனேஷியா விலகல்
x
தினத்தந்தி 8 Dec 2021 7:29 PM GMT (Updated: 8 Dec 2021 7:33 PM GMT)

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உலக பேட்மிண்டன் போட்டியில் இருந்து இந்தோனேஷியா விலகுவதாக அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள ஹெல்வா நகரில் வருகிற 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. 

தென்ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி போட்டியில் இருந்து இந்தோனேஷியா அணி விலகுவதாக அந்த நாட்டு பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும், நடப்பு சாம்–பி–ய–னான ஜப்–பான் வீரர் கென்டோ மோமோட்டா காயம் குண–ம–டை–யா–த–தால் விலகி இருக்–கி–றார்.

Next Story