புரோ கபடி லீக்: டெல்லி - பெங்கால் அணிகள் இன்று பலப்பரீட்சை


புரோ கபடி லீக்: டெல்லி - பெங்கால் அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 29 Dec 2021 7:21 AM GMT (Updated: 2021-12-29T12:51:40+05:30)

இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பெங்கால் அணிபலம் வாய்ந்த டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் புனே மற்றும் பாட்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பாட்னா அணி 38-26 என்ற கணக்கில் புனே அணியை  வீழ்த்தியது.நேற்று நடந்த மற்றொரு போட்டியில் யுபி யோதா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.

புரோ கபடி லீக் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில்  பெங்கால் அணி பலம் வாய்ந்த டபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் டபாங் டெல்லி அணி வலுவாக உள்ளது.

அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத் அணியும் யுபி யோதா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Next Story