புரோ கபடியில் பெங்காலை பந்தாடியது டெல்லி


புரோ கபடியில் பெங்காலை பந்தாடியது டெல்லி
x
தினத்தந்தி 30 Dec 2021 2:01 AM GMT (Updated: 30 Dec 2021 2:01 AM GMT)

நேற்று நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்சை பந்தாடியது.

பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 52-35 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்சை பந்தாடியது. ரைடு செல்வதில் கில்லாடியான டெல்லி வீரர் நவீன்குமார் 24 புள்ளிகளை குவித்து பிரமாதப்படுத்தினார். ஒரு ஆட்டத்தில் அவர் எடுத்த அதிக புள்ளிகள் இது தான். புள்ளி பட்டியலில் தபாங் டெல்லி அணி 3 வெற்றி, ஒரு ‘டை’ என்று 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

உ.பி.யோத்தா- குஜராத் ஜெயன்ட்ஸ் இடையிலான மற்றொரு பரபரப்பான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. இன்றைய லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-யு மும்பா (இரவு 7.30 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story