புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றி
x
தினத்தந்தி 10 Jan 2022 11:16 PM GMT (Updated: 10 Jan 2022 11:16 PM GMT)

நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

பெங்களூருவில் நடந்து வரும் 8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 45-26 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை எளிதில் தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை ருசித்தது. 

மற்றொரு விறுவிறுப்பான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 30-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை தனதாக்கியது. தபாங் டெல்லி அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-மும்பை (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.


Next Story