பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்; சாலிஹா, சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம் + "||" + Indian Open Badminton; Saliha, Indus progress to the quarterfinals

இந்திய ஓபன் பேட்மிண்டன்; சாலிஹா, சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய ஓபன் பேட்மிண்டன்; சாலிஹா, சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாலிஹா, காஷ்யப் மற்றும் சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
புதுடெல்லி,

புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா மற்றும் மாளவிகா பன்சோட் ஆகியோர் விளையாடினர்.

34 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், 21-17, 21-9 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி பன்சோட் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு போட்டியில், ஹோயாக்சை 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாலிஹா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  இதேபோன்று, பி.வி. சிந்து மற்றும் ஆகர்ஷி காஷ்யப் ஆகியோரும் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன்; கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
2. ஆஸ்திரேலிய ஓபன்; டேனில் மெட்வடேவ் காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபனில் டேனில் மெட்வடேவ் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
3. சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்; இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேற்றம்
சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டனில் இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.
4. இந்திய ஓபன் பேட்மிண்டனில் பங்கேற்ற ஸ்ரீகாந்த், அஸ்வினி உள்பட 7 இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீகாந்த், அஸ்வினி உள்பட 7 இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, பிரனாய் 2-வது சுற்றுக்கு தகுதி
இந்திய ஓபன் பேட்மிண்டனில் சாய்னா, பிரனாய் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.