பிற விளையாட்டு

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன், மாளவிகாவுக்கு வெள்ளி பதக்கம் + "||" + Syed Modi International Badminton: PV Sindhu Champion, Silver Medal for Malavika

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன், மாளவிகாவுக்கு வெள்ளி பதக்கம்

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன், மாளவிகாவுக்கு வெள்ளி பதக்கம்
சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வந்தது. இந்த சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் இறுதிப்போட்டியானது இன்று நடைபெற்றது.

இந்த இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை எதிர்த்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பி.டெக் படித்து வரும் நாக்பூரைச் சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் ஆடினார்.

இந்த ஆட்டத்தில் 21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் மாளவிகா பன்சோட்டை வீழ்த்தி பி.வி. சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மாளவிகா பன்சோட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பி.வி. சிந்து, மாளவிகாவுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் வாழ்த்து
சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாளவிகா இருவருக்கும் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.