புரோ கபடி லீக்: புனேரி பல்டன், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றி


புரோ கபடி லீக்: புனேரி பல்டன், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 19 Feb 2022 4:20 PM GMT (Updated: 20 Feb 2022 3:11 AM GMT)

புரோ கபடி லீக்கில் புனேரி பல்டன், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- புனேரி பல்டன் அணிகள் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய  இந்த போட்டியில் புனேரி பல்டன் அணி 30-37 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- யு மும்பா அணிகள் மோதின. இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 36-33 என்ற புள்ளிகள் கணக்கில்  யு மும்பாவை வீழ்த்தி வெற்றிபெற்றது . இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Next Story