கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் - சென்னையில் நாளை தொடங்குகிறது


கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் - சென்னையில் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 11 May 2022 7:56 PM GMT (Updated: 2022-05-12T01:26:43+05:30)

இதில் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 38-வது கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21 நாட்கள் நடக்கிறது. 

இதில் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 6.30 முதல் 9 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் தங்களது பெயரை நேரில் பதிவு செய்து கொள்ளலாம் என்று நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் செயலாளர் பி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Next Story