ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் 14 பதக்கங்களுடன் இந்திய அணி முதலிடம்!


ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் 14 பதக்கங்களுடன் இந்திய அணி முதலிடம்!
x
தினத்தந்தி 12 May 2022 4:49 AM GMT (Updated: 2022-05-12T10:19:23+05:30)

ஈராக்கின் சுலைமானியாவில் ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.

சுலைமானியா,

ஈராக்கின் சுலைமானியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஜூனியர் வில்வித்தை அணி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய ஜூனியர் வில்வித்தை அணி 8 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 14 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

அதே போல, ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி, 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

Next Story