தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி


தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 12 May 2022 7:59 PM GMT (Updated: 12 May 2022 7:59 PM GMT)

தாமஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.

பாங்காக்,

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, தாய்லாந்தை சந்தித்தது. 

இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய தாய்லாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறியது. இதன் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-18, 17-21, 12-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) 59 நிமிடங்களில் வீழ்ந்தார். 

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ருதி மிஸ்ரா-சிம்ரன் சிங்கி ஜோடியும், மற்றொரு ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்பும் அடுத்தடுத்து தோல்வி கண்டனர். தாய்லாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால் அடுத்து நடக்க இருந்த மற்றொரு இரட்டையர், ஒற்றையர் ஆட்டங்களின் முடிவு தேவையில்லாததால் கைவிடப்பட்டன.

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.

Next Story