சர்வதேச செஸ் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் - இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டி


சர்வதேச செஸ் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் - இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டி
x
தினத்தந்தி 13 May 2022 9:58 PM GMT (Updated: 2022-05-14T03:28:32+05:30)

சர்வதேச செஸ் சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியிடுகிறார்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் முடிவில் சர்வதேச செஸ் சம்மேளன (பிடே) நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. 

இதில் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் ஆர்கடி டிவோர்கோவிச் அணியின் தரப்பில் துணைத்தலைவர் பதவிக்கு 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story