புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி..!


புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி..!
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 50-47 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெறும் 2-வது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதி வருகின்றன.

.


Next Story