புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 50-47 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 41-26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெறும் 3-வது போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.


Next Story