புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி


புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
x

Image Tweeted By @ProKabaddi

தெலுங்கு டைட்டன்ஸ் இந்த சீசனில் இன்று தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அணி 2-வது வெற்றியை பெற்றது.

அதை தொடர்ந்து இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் பாட்னா பைரட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30-21 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பெங்கால் அணியிடம் தோல்வி அடைந்து இருந்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி அதற்கு முன் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.

இந்த நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் இன்று தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது அந்த அணி புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.


Next Story