மாநில பள்ளி கைப்பந்து லீக் போட்டி - சென்னையில் நடக்கிறது


மாநில பள்ளி கைப்பந்து லீக் போட்டி - சென்னையில் நடக்கிறது
x

மாநில பள்ளி கைப்பந்து லீக் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் ராம் பிரகாஷ் வாலிபால் அகாடமி சார்பில் தமிழ்நாடு பள்ளி அணிகளுக்கான கைப்பந்து லீக் போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் டிசம்பர் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடக்கிறது. பள்ளிகளுக்கான இந்த போட்டி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது.

இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 லட்சமாகும். மாணவர்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரமும், மாணவிகள் பிரிவில் முதல் 4 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.

5 முதல் 10 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் கிடைக்கும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 28-ந் தேதிக்குள் 8939008347 என்ற எண்ணில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று ராம் பிரகாஷ் வாலிபால் அகாடமி தலைவர் எஸ்.வாசுதேவன், செயலாளர் எஸ்.முகமது ஜின்னா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story