சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரும் மனு - மத்திய, தமிழக அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரும் மனு - மத்திய, தமிழக அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2022 4:23 AM IST (Updated: 11 Oct 2022 6:03 AM IST)
t-max-icont-min-icon

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரும் ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரி கடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெய சுகின் ஆஜராகி, இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த ரிட் மனுவையும் இணைக்கவும், மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு இறுதியில் கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story