சிட்னி டென்னிஸ்:இறுதிப்போட்டியில் சானியா ஜோடி தோல்வி


சிட்னி டென்னிஸ்:இறுதிப்போட்டியில் சானியா ஜோடி தோல்வி
x
தினத்தந்தி 13 Jan 2017 9:45 PM GMT (Updated: 13 Jan 2017 4:08 PM GMT)

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் சிட்னி டென்னிஸ் இறுதிப்போட்டியில் சானியா ஜோடி தோல்வி அடைந்தனர்.

சிட்னி, 

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 4&6, 4&6 என்ற நேர் செட்டில் டைமியா பாபோஸ் (ஹங்கேரி)& அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா) இணையிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.

ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6&4, 6&2 என்ற நேர் செட் கணக்கில் போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். கோன்டா வென்ற 2-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

Next Story