டென்னிஸ்

டென்னிஸ் : காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாது - ஆண்டி முர்ரே + "||" + Murray likely to miss rest of season with hip injury

டென்னிஸ் : காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாது - ஆண்டி முர்ரே

டென்னிஸ் : காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாது - ஆண்டி முர்ரே
உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆண்டி முர்ரே பெரும்பாலும் இவ்வாண்டின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று கூறியுள்ளர்.


காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய அவர் தற்போது தனது இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது ஃபேஸ்புக் பதிவில், “ அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்றார் அவர். எனது இடுப்பு வலி சில மாதங்களாக இருந்து வருவதால் வியன்னா மற்றும் பாரிஸ் விளையாட்டுகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்றார் அவர். மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தப் பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் பிரெஞ்சு ஓபனில் காயமடைந்த அவர் 2018 ஆம் ஆண்டில் பிரிஸ்பேன் நகரிலிருந்து தனது ஆட்டத்தைத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிக்கும் அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாண்டின் இறுதியில் அறக்கொடை நிதிக்காக நடத்தப்படும் காட்சிப் போட்டியில் ரோஜர் பெடரருடன் விளையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.