டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸை வீழ்த்தி பட்டம் வென்றார் ஸ்டீபன்ஸ் + "||" + Stephens beats Keys in all American final to win US Open title

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸை வீழ்த்தி பட்டம் வென்றார் ஸ்டீபன்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸை வீழ்த்தி பட்டம் வென்றார் ஸ்டீபன்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மேடிசன் கீஸை வீழ்த்தி அமெரிக்காவின் ஸ்டீபன்ஸ் பட்டம் வென்றார்.


நியூயார்க்,


‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் - ஸ்டீபன்ஸ் மோதினர். உலக தரவரிசையில் 83வது இடம் வகிக்கும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 15-ம் நிலை வீராங்கனை மேடிசன் கீஸை எதிர்க்கொண்டார். இருவரும் அமெரிக்க வீராங்கனைகள் என்றதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் கரகோஷம் எழுப்பட்டது. 

அனுபவம் வாய்ந்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை அரையிறுதியில் வீட்டுக்கு அனுப்பிய வேகத்தில் ஸ்டீபன்ஸ் களமிறங்கினார். 

ஆட்டம் தொடங்கிய முதல் செட் விறுவிறுப்பை எட்டியது. இரு வீராங்கனைகளும் ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கும் நுழைந்தது இதுவே முதல்முறையாகும். எனவே இருவரில் யாருக்கு பட்டம் என போட்டி பயங்கரமாக காணப்பட்டது. இரு வீராங்கனைகளுமே குழந்தையில் இருந்து நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். போட்டியை வெல்ல ஸ்டீபன்ஸ் நீண்ட நேரம் செலவு செய்யவில்லை. 

 ‘இளம் புயல்’ ஸ்டீபன்சின் சீற்றத்துக்கு முன்னாள் மேடிசனால் நிற்க முடியவில்லை. முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பெற்ற ஸ்டீபன்ஸ் இரண்டாவது செட்டையும் மேடிசன் புள்ளியை எட்டாத வண்ணம் ஆதிக்கம் செலுத்தி 6-0 என்ற கணக்கில் பெற்றார். 

நேட் செட் கணக்கில் மேடிசன் கீஸை வீழ்த்தி ஸ்டீபன்ஸ் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கு சொந்தக்காரி ஆனார். 2002க்கு பின்னர் வில்லியம்ஸ் சகோதரிகள் அல்லாது முதல் கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்ற் வீராங்கனை என்ற பெயரையும் ஸ்டீபன்ஸ் பெற்று உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 24 வயதான ஸ்டீபன்ஸ், இடதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக 11 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் தான் மீண்டும் களம் திரும்பினார். அதன் பிறகு எழுச்சி கண்டு வரும் அவர் அமெரிக்க ஓபனில் வெற்றி பெற்று பட்டம் வென்று  பிரமிக்க வைத்திருக்கிறார்.