டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி + "||" + Davis Cup Tennis: In doubles section Indian pair fails

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா–கனடா இடையிலான ‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டம் எட்மண்டன் நகரில் நடந்து வருகிறது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்களில் ராம்குமார் வெற்றியும், யுகி பாம்ப்ரி தோல்வியும் கண்டனர். இந்த நிலையில் 2–வது நாளில் இரட்டைய

எட்மண்டன்,

டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா–கனடா இடையிலான ‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டம் எட்மண்டன் நகரில் நடந்து வருகிறது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்களில் ராம்குமார் வெற்றியும், யுகி பாம்ப்ரி தோல்வியும் கண்டனர்.

இந்த நிலையில் 2–வது நாளில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– புராவ் ராஜா ஜோடி, கனடாவின் டேனியல் நெஸ்டர்– வாசெக் போஸ்பிசில் இணையை எதிர்கொண்டது. 2 மணி 52 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் போபண்ணா– புராவ் ராஜா இணை 5–7, 5–7, 7–5, 3–6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. உலக குரூப் சுற்றுக்குள் இந்திய அணி நுழைய வேண்டும் என்றால், எஞ்சிய இரு மாற்று ஒற்றையர் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.