டென்னிஸ்

டேவிஸ் கோப்பை: ஷாப்போவாலவ்வின் வெற்றி இந்தியாவின் வாய்ப்பைப் பறித்தது + "||" + Shapovalov shuts door on India guides Canada to World Group

டேவிஸ் கோப்பை: ஷாப்போவாலவ்வின் வெற்றி இந்தியாவின் வாய்ப்பைப் பறித்தது

டேவிஸ் கோப்பை: 
ஷாப்போவாலவ்வின் வெற்றி 
இந்தியாவின் வாய்ப்பைப் பறித்தது
இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் கனடாவின் ஷாப்போலாவ்விடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தியா அடுத்தச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
எட்மாண்டன்

ஷாப்போலாவ் 6-3, 7-6(1), 6-3 என்ற நேர் செட் கணக்கில் ராம்குமாரை வென்றார். இதன் மூலம் ஐந்து ஆட்டங்களில் கனடா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

இத்தோல்வி மூலம் தொடர்ச்சியாக நான்காம் ஆண்டில் இந்தியா ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் தோல்வியடைந்துள்ளது. செர்பியா, செக் குடியரசு மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிடம் கடந்த மூன்று வருடங்களில் இந்த வாய்ப்பை இழந்திருந்தது. அடுத்துள்ள ஒரேயொரு வாய்ப்பில் யூகி பாம்ப்ரி பிரேடன் ஷூநுரை எதிர்த்து விளையாடவுள்ளார்.