டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா–ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி பங்கேற்பு + "||" + Marathon Open Tennis: Rogan Bopanna - Jeevan Neduchenian couple participation

மராட்டிய ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா–ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி பங்கேற்பு

மராட்டிய ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா–ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி பங்கேற்பு
21 ஆண்டுகளாக நடந்து வந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வர்த்தக நலன் கருதி சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

புனே,

21 ஆண்டுகளாக நடந்து வந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வர்த்தக நலன் கருதி சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதலாவது மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் வருகிற 30–ந் தேதி முதல் ஜனவரி 6–ந் தேதி வரை நடக்கிறது. தென்னிந்தியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியான இதன் இரட்டையர் போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. நடப்பு சாம்பியனான இந்தியாவின் ரோகன் போபண்ணா–ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி இணைந்து மீண்டும் களம் காணுகிறது. இந்திய வீரர் புரவ்ராஜா, சக மூத்த வீரர் லியாண்டர் பெயஸ்சுடன் இணைந்து ஆடுகிறார். முன்பு புரவ்ராஜாவுடன் இணைந்து ஆடிய திவிஜ் சரண், அமெரிக்க வீரர் ஸ்காட் லிப்ஸ்கியுடன் ஜோடி சேர்ந்து விளையாடுகிறார். இந்திய வீரர்கள் விஷ்ணுவர்தன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றால் இந்த போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயரும்.