டென்னிஸ்

பிரிஸ்பேன் டென்னிஸ்: கடைசி நேரத்தில் கிவிடோவா விலகல் + "||" + Kiwitova's departure at the last moment

பிரிஸ்பேன் டென்னிஸ்: கடைசி நேரத்தில் கிவிடோவா விலகல்

பிரிஸ்பேன் டென்னிஸ்: கடைசி நேரத்தில் கிவிடோவா விலகல்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது.
பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 2 முறை விம்பிள்டன் சாம்பியனான செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா முதல் சுற்றில் எஸ்தோனியாவின் அனெட் கோன்டாவெயிட்டுடன் மோத இருந்தார். ஆனால் வைரஸ் நோய் தொற்று காரணமாக கிவிடோவா கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகி விட்டார்.


27 வயதான கிவிடோவா கூறுகையில், ‘புதிய சீசனை சவாலாக தொடங்குவதற்கு அருமையான இடம் பிரிஸ்பேன். துரதிர்ஷ்டவசமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடல்தகுதியை எட்ட முடியவில்லை. போட்டி அட்டவணையில் இடம் பெற முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்’ என்றார்.