டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் மரின் சிலிச் இரட்டையரில் போபண்ணா ஜோடி தோல்வி + "||" + Marathon Open Tennis: In the semi-finals Marine cilic

மராட்டிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் மரின் சிலிச் இரட்டையரில் போபண்ணா ஜோடி தோல்வி

மராட்டிய ஓபன் டென்னிஸ்:
அரைஇறுதியில் மரின் சிலிச்
இரட்டையரில் போபண்ணா ஜோடி தோல்வி
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.
புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் மரின் சிலிச் (குரோஷியா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பியாரே ஹக்ஸ் ஹெர்பர்ட்டை (பிரான்ஸ்) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்), ஜிலெஸ் சிமோன் (பிரான்ஸ்) ஆகியோரும் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

இரட்டையர் கால்இறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 3-6, 5-7 என்ற நேர் செட்டில் பிரான்சின் ஜிலெஸ் சிமோன்- ஹெர்பர்ட் இணையிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- திவிஜ் ஷரண் கூட்டணி 7-5, 2-6, 10-6 என்ற செட் கணக்கில் லின்ட்ஸ்டெட் (சுவீடன்)- ஸ்குஹோர் (குரோஷியா) ஜோடியை சாய்த்து அரைஇறுதியை எட்டியது.