ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்
x
தினத்தந்தி 5 Jan 2018 9:00 PM GMT (Updated: 5 Jan 2018 8:16 PM GMT)

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 36 வயதான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். சமீபத்தில் அபுதாபியில் நடந்த காட்சி போட்டியில் ஆஸ்டாபென்கோவிடம் (லாத்வியா) செரீனா தோல்வி கண்டார். கடந்த செப்டம்பர் மாதத்தில் குழந்தை பெற்ற பிறகு ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்காக தன்னை தயார்படுத்திய செரீனா வில்லியம்ஸ் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு முழு உடல் தகுதியை எட்டாததால் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இதேபோல் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே ஜப்பான் வீரர் நிஷிகோரியும் காயம் காரணமாக விலகி இருக்கிறார். முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜோகோவிச்(செர்பியா) இந்த போட்டியில் ஆடுவது சந்தேகம் தான்.


Next Story